ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3.75 லட்சம் மதிப்பிலான மஞ்சள் பறிமுதல்

0 1398

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாளை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், போலீசார் சோதனை மேற்கொண்டதில், முகமது அலி ஜின்னா என்பவருக்கு சொந்தமான வீட்டில், 25 மூட்டைகளில் 875 கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்த போலீசார், முகமது அலி ஜின்னா-வை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments