கொரோனா தொற்று அதிகரிப்பால் 2,600 விமானங்கள் நிறுத்தம்.!

0 2911

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 600 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600 விமானங்கள் சேவையை ரத்து செய்துள்ளன. ஃபிளைட்அவேர் என்ற கண்காணிப்பு இணையதளத்தின்படி, சர்வதேச அளவில் சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் 500 விமானங்களையும், ஏர் சீனா 200 விமானங்களையும் நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் காரணமாக டிசம்பர் 24 முதல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இவை தவிர கடினமான வானிலை காரணமாக சிகாகோவில் உள்ள விமான நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments