உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யாவுக்கு உறுதியான பதிலடி தரப்படும் - ஜோ பைடன்

0 1904

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யாவுக்கு உறுதியான பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய ஜோ பைடன் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ரஷ்யாவுக்கு உரிய பதிலடியைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

பதற்றத்தைத் தணிக்க அரசு முறை பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்றும் ஜோ பைடன் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையும் அதன்இறையாண்மையும் பாதுகாக்கப்படும் என்றும் அமெரிக்கா உக்ரைனுக்கு உறுதியளித்துள்ளது. 

ஜனவரி 10 ஆம் தேதி ஜெனிவாவில் ஐநாகூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments