திண்டுக்கல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதே மீன்பிடி காண்டிராக்டரை சுட்டுக் கொலை செய்த மர்மகும்பல்..!

0 3251

திண்டுக்கல் மாவட்டம் செட்டிகுளத்தில் மீன்பிடி காண்டிராக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த ராக்கேஷ் குமார் என்பவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய செட்டிகுளம் மீன் பிடிக்கும் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் குளம் ஏலம் எடுப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் இவருக்கு முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு ராக்கேஷ் குமார் தனது நண்பர்களுடன் செட்டிகுளத்தில் இருந்த போது அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் வயிற்றில் சுட்டும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராக்கேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கலில் மீன்பிடி காண்டிராக்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்ற 27வயது இளைஞர், மீன் பிடி காண்ட்ராக்டர் தொழில் செய்து வந்தார்.

நேற்றிரவு செட்டிகுளம் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ராகேஷ்குமாரிடம், அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டதோடு, அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

ராகேஷ்குமாரின் உடலில் 6 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறும் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிப்பதற்கு குளம் ஏலம் எடுப்பதில் ராகேஷ்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments