இந்தியாவுக்கு அதி நவீன பீரங்கிகளை வழங்க பிரான்ஸ் ஒப்புதல்

0 1479

அதிநவீன லெக்லர்க் பீரங்கிகளை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் ஆதரவளித்துள்ளது. தற்போது இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்யாவின் T 72 ரக பீரங்கிகளுக்குப் பதிலாக சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயிரத்து 770 பீரங்கிகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யா, இஸ்ரேல், ஐரோப்பா, துருக்கி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 12 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதில் பிரான்ஸ் நாட்டின் லெக்லர்க் பீரங்கி தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்டர் நிறுவனமும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு நெக்ஸ்டர் நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

லெக்லர்க் பீரங்கி அமெரிக்காவின் எம் 1 ஆப்ரமாஸ், இங்கிலாந்தின் சேலஞ்சர், ஜெர்மனியின் லெப்பர்டு போன்ற பீரங்கிகளுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments