தமிழகத்தில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கும் பணி நாளை தொடக்கம்

0 3224

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்பு திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நாளை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பார் என்றும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நாளை மறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments