பிரதமர் மோடி நாளை மணிப்பூர், திரிபுராவில் சுற்றுப்பயணம்.!

0 1096

பிரதமர் மோடி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இம்பாலில் 4ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார்.

சாலை கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இத்திட்டங்கள் அடங்கும். ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 2ஆயிரத்து 350-க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களையும் மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அகர்தலாவில் மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில், ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை மோடி தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments