தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது விபரீதம் ; தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்

0 2679
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது சிறுவனை தேடும் பணி தீவிரம்

சென்னை அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது சிறுவனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அயனம்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால், அவரது மனைவி மற்றும் இரு மகன்களுடன் பைக்கில் உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர்.

அப்போது இருசக்கர வாகனம் தண்ணீரில் சிக்கிக்கொண்ட நிலையில், வேணுகோபாலின் மூத்த மகன் 13 வயதான குமரேசன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

கூவம் தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ள நிலையில் அதனை மீறி தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments