தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு கிராம உதவியாளர் தற்கொலை

0 3833
தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு கிராம உதவியாளர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த விநாயகசுந்தரம், கடந்த 31 தேதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். அதில் குடும்பத் தகராறு காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கு செய்ய முற்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விநாயக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments