அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

0 1807
சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை

ஒமைக்ரான் வகை தொற்று மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார். தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்று நிலவரம், மருத்துவ உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், நாளை முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள், பூஸ்டர் டோஸ் தொடர்பாவும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் முறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments