கொடைக்கானல் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

0 1766
கொடைக்கானல் அருகே மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையின் காரணமாக தாண்டிக்குடியில் இருந்து ஆத்தூர் தாலுகாவிற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் நேற்று காலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதிகளான தாண்டிகுடி, தடியன்குடிசை, புல்லாவெளி வழியாக ஆத்தூர் தாலுக்காவிற்கு செல்லும் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் மற்றும் மரங்கள் உருண்டு விழுந்தன.

இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments