16 வயதினிலே காதலிக்கு வாயில் விஷம் ஊற்றிய காதலன்..! மருத்துவமனையில் உயிர் ஊசல்

0 5027

தூத்துக்குடி அருகே 11 ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 16 வயது காதலியின் வாயில் விஷத்தை ஊற்றிய ஜே.சி.பி ஓட்டுனர் தானும் விஷத்தை அருந்தி தற்கொலை நாடகமாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே செவல்குளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஜேசிபி ஆபரேட்டரான இவர் அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை காதல்வலையில் வீழ்த்தி உள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவியின் மனதை கெடுத்ததோடில்லாமல் அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

தங்கள் மகள் சிறுமி என்பதை சுட்டிக்காட்டி வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் மகளிடம் புத்திமதி கூறியதால் அவர் வேல்முருகனுடனான காதலை துண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ந்தேதி சிறுமியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். தான் படிக்க வேண்டும் என்றும் மீண்டும் காதலிக்க முடியாது என்றும் கூறி சிறுமி மறுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து ஆத்திரமடைந்த வேல்முருகன், தனது கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை சிறுமியை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றி குடிக்கவைத்து தானும் குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக வீட்டிற்கு வெளியே வந்து அந்த சிறுமி விஷம் ஊற்றப்பட்டது குறித்து தெரிவித்து மயங்கி விழுந்ததால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமிக்கும், வேல்முருகனுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் வேல்முருகன் மீது கொலைமுயற்சி வழக்குடன் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து தடம் மாறி காதலில் விழுந்தால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments