சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு: ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0 2072

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேர்ந்த வெடி விபத்தில் 4 பேர் உடல்கருகி உயிரிழந்ததை அடுத்து, விபத்து ஏற்படுத்தியதாக பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும்,  ஆலையை மூடவும் ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார்.

களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து நேர்ந்தது. இதில் பட்டாசு தயாரிக்கும் அறைகளில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் 7 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.

இந்த வெடிவிபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  உரிய பாதுகாப்பு இன்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது வழக்குப் பதிந்துள்ள நத்தம்பட்டி காவல்துறையினர், அவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments