சட்டிஸ்கரில் 9 பெண்கள் உட்பட 44 மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண்

0 2204

சட்டிஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 9 பெண்கள் உட்பட 44 நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

வன்முறை பாதையைக் கைவிட்டு மைய நீரோட்ட வாழ்வுக்கு வருமாறு காவல்துறையினர் விடுத்த அழைப்பை ஏற்று, நெடுநாட்களாக வனப்பகுதிகளில் வாழ நேரிட்ட நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரணடைந்தனர். சரண் அடைந்த நக்சல்களுக்கு போலீசார் விருந்து அளித்து உபசரிப்பு செய்தனர்.

இதனிடையே சட்டிஸ்கரின் ஜாகர்குண்டா பகுதியில் நக்சல்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments