புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி தீவிரவாதியும் சுட்டுக் கொலை

0 5052

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட கடைசி தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார், கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று அனந்த்நாக் பகுதியில் என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டார்.

கொல்லப்பட்டவன் சமீர் தார் என்பது உறுதியானதாகவும் கடந்த 2019ல் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில், எஞ்சியிருந்த சமீரும் இறந்தது உறுதியானதாகவும் விஜயகுமார் தெரிவித்தார். கடந்த 2019 பிப்ரவரியில் புல்வாமா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments