கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக இரண்டு பேர் கைது

0 3221
கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக இரண்டு பேர் கைது

மதுரையில் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சர்வேயர் காலனியை சேர்ந்த ஜெயப்பிரகாசம் என்பவர் கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்த வீர மனோகர் மற்றும் அவனியாபுரம் பெரியசாமி நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் வட்டிக்கு 11 லட்சம் ரூபாய் வாங்கியிருந்ததாகவும், வட்டியும் முதலுமாக கடனை திருப்பி செலுத்தி விட்ட போதிலும், 2 பேரும் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர்கள் இருவரும் தன்னை தாக்கி தனது செல்போனை பறித்து கொண்டு வீட்டுக்குள் அடைத்து பூட்டி விட்டு சென்றதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் விசாரணையில், வீரமனோகர், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்தது உறுதியானது. இதனையடுத்து இருவரையும் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments