பாலியல் வழக்கில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 2293
பாலியல் வழக்கில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டுஅப்பகுதியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை மாவட்ட அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சரவணன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்த காலம் உள்ளிட்ட எந்தவித சிறப்பு காரணங்களை கருத்தில் கொண்டும்,குறைவாக தண்டனை வழங்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற அறிவுரையை சுட்டிக்காட்டி, அவரது தண்டனையை உறுதி செய்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments