தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 4902
தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 28ஆம் தேதி மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 619ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை ஆயிரத்து 489-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கும், செங்கல்பட்டில் 168 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும். கொரோனா தொற்று பாதிப்புடன் 8 ஆயிரத்து 340 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், ஒரே நாளில் 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், புதிய வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121ஆக அதிகரித்துள்ளது.

இதில், 64 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments