6ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது ; மத்திய நிதியமைச்சகம்

0 2817
6ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

தொடர்ந்து 6ஆவது மாதமாக டிசம்பரிலும் நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

செய்தி குறிப்பு ஒன்றில் இதனை தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சகம், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடக் கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 13 சதவீதம் அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும், மத்திய ஜிஎஸ்டி வரியாக 22 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரி 28 ஆயிரம் கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments