ஸ்குரு டிரைவரால் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகள் கைது

0 5948
ஸ்குரு டிரைவரால் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகள் கைது

திருச்சியில் மாமியாரை ஸ்குரு டிரைவரால் குத்திக் கொலை செய்து, சடலத்தை தீவைத்து எரித்துவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர்.

விஸ்வாஸ் நகரை சேர்ந்த நவீன் என்ற 46 வயதுடைய பெண் கடந்த 30-ம் தேதி உடல் கருகிய நிலையில் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அருகில் அவரது மருமகள் ரேஷ்மா மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

நவீன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் தலையில் கத்தி போன்ற ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மருமகள் ரேஷ்மாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மாமியாரை குத்திக் கொலை செய்தது அம்பலமானது. காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்காத மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், முதல் குழந்தை பிறந்து இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இரண்டாவதாக கருவுற்ற தன்னை கலைக்குமாறு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்தது தெரியாமல் இருக்க மண்ணெணெய் ஊற்றி அவரது சடலத்தை எரித்ததும் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments