சென்னையில் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 147 வழக்குகள் பதிவு.. ஒருவர் உயிரிழப்பு.!

0 2663

சென்னையில் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீசாரால் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் 499 சோதனைச் சாவடிகள் அமைத்து, 13 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இரவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 147 வழக்குகளைப் பதிவு செய்த போலீசார், 35 கார்கள், 103 பைக்குகள் மற்றும் 2 ஆட்டோ-களை பறிமுதல் செய்தனர்.

இது தவிர பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது என பல்வேறு போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டோர் மீது 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச் சாலையில், அதிவேகமாக பைக்கில் வந்த 21 வயது இளைஞர் ஒருவர் சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments