தென் கொரியாவில் ஒரே நேரத்தில் பிறந்த 5 அரியவகை சைபீரிய புலிக்குட்டிகளை காண குவிந்த மக்கள்

0 2639

தென் கொரியாவில் புத்தாண்டையொட்டி, ஒரே நேரத்தில் பிறந்த 5 அரியவகை சைபீரிய புலிக்குட்டிகளை காண, உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

2022-ம் ஆண்டு தென் கொரியாவில் பாரம்பரிய வழக்கப்படி புலிகள் ஆண்டாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாண்டு நேரத்தில் புலிகளை காண்பது தங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

யோங்கின் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பனி நிறைந்த தரையில், புலிக்குட்டிகள் உற்சாகமாக விளையாடுவதை குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments