கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது: ஓமைக்ரானை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் - முதலமைச்சர்
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2022-ம் ஆண்டு நன்றாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு என்றும், கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை மறந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையில் இருந்து மீண்டு வந்துள்ள நாம், கொரோனா மற்றும் ஓமைக்ரானை ஒழிக்க 2022-ம் ஆண்டிலும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓமைக்ரான் பரவல் தொடங்கியுள்ளதால் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Comments