திருப்பதியில் புத்தாண்டையொட்டி நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம்

0 4861

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் வெளியே வந்த ரனாவத், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேபோல் தெலுங்கு, தமிழ்,கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல குணச்சித்திர நடிகரான சாய்குமார் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று குடும்பத்தாருடன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments