மக்களுக்கு புது நம்பிக்கை ஏற்படுத்த இசையால் புத்தாண்டை வரவேற்ற மருத்துவர்

0 2733

சிங்கப்பூரில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்துவரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பிரபல மருத்துவர்களை வைத்து ஆன் லைன் மூலம் ஒருங்கிணைத்து காலதரங்கிணி என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்

கையில் ஸ்டெதஸ்கோப், ஊசி என்று எப்போதும் பரபரப்பாக மருத்துவ பணியில் உள்ள மருத்துவர்களை ஒருங்கிணைத்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சி ஒன்றை ஆன்லைன் மூலம் நடத்தி அசத்தி உள்ளார் சிங்கப்பூரில் படித்துவரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவமாணவியான ஹிராண்யா

சிங்கப்பூரில் உள்ளசெயிண்ட் ஜார்ஜ் பல்கலைகழகத்தில் பயின்றுவரும் ஹிராண்யாவுக்கு சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் என்பதால், தனக்கு அறிமுகமான மருத்துவர்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் நோயில்லை என்பதை உணர்த்தி புத்தாண்டை வரவேற்கும் விதமாக காலதரங்கிணி என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

ஹிராண்யாவின் வாய்ப்பாட்டிற்கு திருவனந்தபுரம் மருத்துவர் பாபு மிருதங்கம் இசைத்தார்

சென்னையை சேர்ந்த மூகாம்பிகை பல்மருத்துகல்லூரி பேராசிரியரான பிரதீப் கிறிஸ்டோபர் கிதார் மூலம் தனது மெல்லிசையை வாசித்தார்

தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை மருத்துவர் பத்ரி நாராயணன் வயலின் இசைக்க , லண்டனில் உள்ள ராயல் பல்கலைகழக மருத்துவர் மெர்வின் மகேந்திரன் மோர்ஷிங் இசைக்கு வியப்பூட்டினர்

சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் நிவேதிதா வீணை இசைக்க, கே.கே. நகரை சேர்ந்த மருத்துவர் நிருபா தனது நாட்டிய அசைவுகளால் கவர்ந்தார்

கடந்த ஆண்டின் பெரும்பகுதியை மருத்துவர்களின் துணையோடும், கொரோனாவின் கோரமுகத்தோடுய்ம் கடந்த தமிழக மக்களுக்கு ஒமிக்காரன் குறித்த முன் எச்சரிக்கையையும், புது நம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டை மருத்துவர்கள் இசையோடு வரவேற்றது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments