கர்நாடகாவில் 50 கோடி ரூபாய் சொத்துக்காக தாயின் ரவுடி காதலனை ஏவி, தாயை கொலை செய்த மகள்.!

0 7279

50 கோடி ரூபாய் சொத்துக்காக தாயின் ரவுடி காதலனை ஏவி, தாயை கொலை செய்ததாக மகளை போலீசார் கைது செய்துள்ளனர். வயதுக்கு மீறிய காதல் வாழ்க்கையால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஜன நெருக்கடி மிகுந்த எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் கோடீஸ்வர பெண் ஒருவரை கொடுவாளால் வெட்டிக் கொன்ற சம்பவத்தில் இருவர் வீடியோ காட்சியால் சிக்கிய நிலையில், கொலையாளிகளை ஏவியதாக, போலீஸ்பிடியில் சிக்கி உள்ள அந்த பெண்ணின் செல்ல மகள் இவர்தான்..!

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகில் உள்ள ஜிகினி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. கோடீஸ்வர பெண்மணியான இவருக்கு சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் பெங்களூரில் உள்ள நிலையில் சம்பவத்தன்று காரில் தனியாக வந்த அர்ச்சனா ரெட்டியின் காருக்குள் இரு சக்கரவானகனத்தை மோதவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கிய இருவர் அர்ச்சனாவை கொடு வாளால் பயங்கரமாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

செல்போனில் படம் பிடிக்கப்பட்ட காட்சி மூலம் கொலையாளி வேறுயாருமல்ல அர்ச்சனாவின் 3 வது கணவர் நவீன் மற்றும் அவரது கூட்டாளியான சந்தோஷ் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொடூர கொலை சம்பவத்தின் பின்னணியில் அர்ச்சனாவின் மகள் யூவிகா இருப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது இந்த கொலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது

அர்ச்சனாரெட்டி முதலில் அரவிந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இவர்களுக்கு பிறந்த செல்ல மகள் தான் யூவிகா, முதல் கணவரை விட்டு விலகி அர்ச்சனா 2 வதாக ஒருவருடன் குடித்தனம் நடத்திய போதும், 3 வதாக பிரபல ரவுடி நவீன் என்பவனை காதலித்து மணந்த போதும், தனது ஆசை மகள் யூனிகாவை மட்டும் தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார். தாய் அர்ச்சனாவின் வயதுக்கு மீறிய காதல் நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்து வந்துளார்.

இந்த நிலையில் தாயின் 3 வது கணவரான நவீன் உடன் யூவிகாவுக்கு முறைதவறிய காதல் மலர்ந்துள்ளது. ரெட்டை ரோஜா போல தாய் மகள் என இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்த ரவுடி நவீனிடம் தனது தாய் 4 வதாக வேறு ஒரு நபரை தேடிச்செல்லபோகிறார், சொத்து ஏதும் நமக்கு கிடைக்காது அதனால் அர்ச்சனாவை தீர்த்துக்கட்டிவிட்டால் வாரிசு என்கிற அடிப்படையில் சொத்து தனது கைக்கு வந்து விடும் , நான் உன்னை ஜாமீனில் எடுத்து விடுகிறேன் பின்னர் நாம் சேர்ந்து வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய ரவுடி நவீன் கூட்டாளியுடன் சேர்ந்து அர்ச்சனாவை பகிரங்கமாக கொலை செய்துவிட்டு தப்பி உள்ளான். அவனது கெட்ட நேரம் பொதுமக்கள் எடுத்த வீடியோவால் வசமாக போலீசில் சிக்கிக்கொண்டான். வீடியோ காட்சியால் காதலன் நவீன் சிக்கிக் கொண்டதும் அவனை கழட்டிவிட யூவிகா திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தான், இந்த கொலை சம்பவத்தில் யூவிகாவின் மாஸ்டர்பிளானை போலீசில் போட்டுக் கொடுத்தான் நவீன் என்கிறது காவல்துறை.

இதையடுத்து அர்ச்சனாவின் கொலை சம்பவம் தொடர்பாக நவீன், சந்தோஷ் ஆகிய இருவருடன் சேர்ந்து கொலையாளிகளை ஏவியதாக யூவிகாவையும் பெங்களூரு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments