மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

0 2706

மகாராஷ்டிரத்தில் அமைச்சர்கள் 10 பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருபதுக்கு மேற்பட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில் புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் அஜித் பவார், மும்பையிலும் புனேயிலும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் சட்டமன்றக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால் கூடுதல் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments