ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்.!

0 8945

ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்துவோருக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் கட்டணம் விதிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏடிஎம் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் தனது வங்கியின் ஏடிஎம்களில் மாதம் 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதம் மூன்று முறையும் இலவசப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம்.

இலவச வரம்புக்கு மேல் உள்ள பணப் பரிவர்த்தனைகளுக்கு 17 ரூபாயும், பணமல்லாப் பரிவர்த்தனைகளுக்கு 7 ரூபாயும் கட்டணம் பெற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆகஸ்டு மாதத்தில் அனுமதி அளித்தது.

இன்று முதல் பணப் பரிவர்த்தனை, பணமல்லாப் பரிவர்த்தனை சேர்த்து ஒரு மாதத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக ஏடிஎம் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments