பூமி அருகில் கடந்து செல்ல இருக்கும் விண்வெளிப் பாறை.!
சிறிய விண்வெளிப் பாறை ஒன்று வரும் 18ம் தேதி பூமியைக் கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
7482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் பாறையை கடந்த 1994ம் ஆண்டு ஆஸ்திரேலிய வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 3 ஆயிரத்து 280 அடி விட்டம் கொண்ட இந்தப் பாறை வரும் 18ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 12 லட்சம் மைல்கள் தூரத்தில் கடந்து செல்லும் என்றும், இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நடப்பாண்டுக்கு பின் இந்தப் பாறை 2105ம் ஆண்டுதான் பூமிக்கு அருகில் வரும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments