காந்தியைப் பற்றி அவதூறாகப் பேசி கைது செய்யப்பட்ட இந்து மதத் தலைவர் காளிசரண் மகராஜ் சிறையில் அடைப்பு.!

0 4030

மகாத்மா காந்தியைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இந்து மதத் தலைவர் காளிசரண் மகராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காளிசரண் மகாராஜ், மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்துக்களைப் பேசினார். இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவரை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் நேற்று ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து காளிசரண் மகராஜ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments