ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்.!

0 3321

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி, கோவில்களில் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன்கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வெளியூர்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

புத்தாண்டு பிறப்பின்போது ஏழுமலையானை வழிபடுவதற்காக, திருப்பதியில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். நள்ளிரவில் கோவில் எதிரே கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வழிபட்டனர்.

பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறிக்கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில், புத்தாண்டு பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் விநாயகரை தரிசித்தனர்.

ஆங்கில புத்தாண்டு பிறந்த தை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் ஏராளமான மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் விநாயகரை தரிசித்தனர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனைத்த தொடர்ந்து நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர்  பங்கேற்றனர்.

புத்தாண்டையொட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் உச்சி பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

 

புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தகிணறுகளில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மூலவர் முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்தில், பச்சைக்கல் மரகத மாலையுடன், காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

புத்தாண்டையொட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். பக்தகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அரோகரா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments