உலகம் முழுவதும் 2022 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்..!

0 2661

உலகம் முழுவதும் உள்ள மக்களின் உற்சாகத்திற்கிடையே, 2022 புத்தாண்டு பிறந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்தனர்.

2021ம் ஆண்டு முடிந்து 2022ம் ஆங்கிலப் புத்தாண்டு இனிதே பிறந்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

புதுச்சேரி கடற்கரையில் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளும், வெளிமாநிலத்தவரும் திரண்டனர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது.
ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூஇயர் என வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கோவா கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்து உற்சாக முழக்கமிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு அவர்களின் கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

2022 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன. மும்பையில் உள்ள பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தின் மீது மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு கண்கவர் லேசர் காட்சிகளை மக்கள் கண்டு களித்தனர்.

மதுரையில் குடியிருப்புப் பகுதியிலும் புத்தாண்டு களைகட்டியது. கோச்சடை பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள 600 குடும்பத்தினர் இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடினர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை உள்ளிட்ட சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள நகரங்கள் அமைதியாக புத்தாண்டை வரவேற்றன. மக்கள் ஆரவாரமின்றி ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் புத்தாண்டை வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments