2022 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்.. வாணவேடிக்கைகளுடன் கோலாகல கொண்டாட்டம்.!

0 3318

உலகம் முழுவதும் ஆங்கலப் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள் உற்சாகத்தோடு புதிய வருடத்தை வரவேற்றனர்...

இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது.

அந்நாட்டின் ஆக்லாந்தில் வாணவேடிக்கைகளுடனும், ஒளிக்காட்சியமைப்புகளுடன் மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் ஒன்றுகூடி 2022ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

ஆஸ்திரேலியாவில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து கொண்டாட்டம் களைகட்டியது.

அந்நாட்டின் சிட்னியில் உள்ள துறைமுக பாலம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த நிலையில், வாணவேடிக்கைகள், வண்ணமயமான லேசர் ஒளிக்கற்றைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புகழ்பெற்ற ஒபெரா மாளிகையும் மின்விளக்குகளால் ஒளிர்ந்தது.

வடகொரியா நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. அந்நாட்டின் தலைநகரான பியாங்யாங்கில் வாணவேடிக்கைகளுடன், நடன நிகழ்ச்சிகளுடனும் புத்தாண்டை வரவேற்ற மக்கள் உற்சாகத்துடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments