கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. பச்சையப்பன் கல்லூரி மாணவர் மனோஜ் கைது 6 பேருக்கு வலைவீச்சு.!

0 5499

திருவள்ளூரில், ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 29ஆம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில், மாநில கல்லூரியில் படித்து வந்த குமார் என்ற மாணவர் ரயில் முன் பாய்ந்து குமார் தற்கொலை செய்துக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது செய்த நிலையில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள், குமாரை முட்டி போட வைத்து ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், குமார் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என மனோஜ் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதையொட்டி, இவ்வழக்கை தற்கொலை சட்டப்பிரிவு 174 லிருந்து, கொலைமுயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல் சட்டப்பிரிவுகளில் மாற்றிய ரயில்வே காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments