சத்தியமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை தின்ற 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

0 12155

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை தின்ற நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாசரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார் மற்றும் நிவேஷ் ஆகிய நான்கு சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை கொய்யாக்காய் என நினைத்து பறித்துச் தின்றுள்ளனர்.

அவை விஷ காய்கள் என்பதால் சிறிது நேரத்தில் நான்கு சிறுவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட அவர்களது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் 4 பேரையும் உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு சிறுவர்களும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments