செங்கல்பட்டில் முகவரி கேட்பது போல் நடித்து ரூ.2 லட்சத்தை திருடி சென்ற 2 மர்ம நபர்கள்

0 2620

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரிடம் முகவரி கேட்பது போல் கவனத்தை திசை திருப்பி, 2 லட்ச ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மறைமலைநகர் பகுதியை சேர்ந்த முருகேசன் திருவள்ளுவர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து 2 லட்ச ரூபாய் எடுத்து வந்து தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துள்ளார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் முருகேசனிடம் முகவரி கேட்பது போல் கேட்க, மற்றொரு நபர் டேங்க் கவரில் இருந்த பணப்பையை எடுத்த நிலையில், இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

முருகேசன் அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments