திருப்பூரில் நகராட்சியில் இருந்து வருவதாக பொய்கூறி பொதுமக்களிடம் பணவசூல்.!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நகராட்சி ஊழியர்கள் என பொய் சொல்லி வீடு வீடாக கிருமி நாசினி தெளித்து அதற்கு பணம் வசூலித்து வந்த இருவரை பிடித்து அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் ரவி ஆகியோர் நேற்று பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பனப்பாளையம், மேற்கு பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு போலி வேடம் போட்டு பண வசூலில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பிடித்த நகராட்சி அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Comments