ஒமைக்ரான் அச்சுறுத்தல் - ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகுமா.?

0 6259

தமிழகத்தில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் மற்றும் பண்டிகை கால கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றார். ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் இரவு நேர ஊரடங்கு தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் முதலமைச்சர் இன்று முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments