நிச்சயமாக இன்றைக்குள் அனைத்து இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுவிடும் - முதலமைச்சர்

0 2517

சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

ஆழ்வார்பேட்டை சீத்தாம்மாள் காலணி, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை, தியாகராய நகர் ஜி.என்.ஷெட்டி சாலை, திருமலை சாலை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிச்சயமாக இன்றைக்குள் அனைத்து இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டுவிடும் என்றார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வுக்கான இயந்திரங்கள், கருவிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்வது குறித்தும், அவற்றை மேம்படுத்துவது குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனவும், அடுத்த மழைக் காலம் வருவதற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க உறுதியான நிலையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments