வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து..! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசம்

0 2947

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசமானது.

கோவையில் இருந்து அட்டை லோடு ஏற்றி வந்த ஓட்டுநர் சரவணகுமார் லாரியை தனது வீட்டுக்கு முன் நிறுத்தி வைத்துவிட்டு உறங்க சென்றிருக்கிறார்.

திடீரென அதிகாலையில் லாரி தீப்பற்றி எரிந்த நிலையில், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இருப்பினும் லாரியில் இருந்த அட்டைகள் முழுவதும் சேதமடைந்தது. லாரி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments