நாட்டின் ஒமைக்ரான் பாதிப்பு 1,200 -ஐத் தாண்டியது : கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டியது !

0 3563

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 764 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து 7 ஆயிரத்து 585 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை, ஆயிரத்து 270ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 309 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 320 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments