தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

0 2594

தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சீர்குலைக்க காலிஸ்தான் ஆதரவுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால், மும்பையில் உள்ள ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மால்கள், மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளனர்.

தாதர், பாந்த்ரா, சர்ச்கேட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழுவதும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே மும்பையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் விடுமுறையில் இருப்போரை உடனடியாக பணிக்குத் திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments