அருணாசலப் பிரதேசத்தில் உரிமை கொண்டாடி வரும் சீனா, 15 இடங்களில் சீன மொழியில் பெயர்பலகைகள்

0 3217

ருணாச்சலப் பிரதேசத்தில் சீனா 15 இடங்களில் உரிமை கோரி தனது பகுதியாக அறிவித்துள்ளது.8 குடியிருப்பு பகுதிகள், இரண்டு மலைகள், இரண்டு ஆறுகள் ஒரு மலைப்பாதை ஆகியவை தமக்கு சொந்தம் என்று சீனா உரிமை கோரியுள்ளது.

அங்கு சீன மொழியில் பெயர் மாற்றப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சீனா பெயர் மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சீனாவில் எல்லைகள் மீட்பு மற்றும் விரிவாக்க சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து ஜனவரி முதல் தேதியில் இருந்து எல்லை பாதுகாப்பு சட்டம் அமலுக்குவருகிறது.

இதில் இடம் பெற்ற பட்டியலில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசமும் உள்ளடக்கியுள்ளது.இங்கு எல்லையோர கிராமங்களைக் கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments