சென்னையில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள்... நள்ளிரவில் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

0 3824

சென்னையின் மழை வெள்ள பாதிப்புகளை நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருச்சி, தஞ்சை சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றிரவு மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு விரைந்தார்.

அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, நகரின் முக்கியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரியமேடு பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களுக்குச் சென்றார். மழைநீர் பம்ப்செட் மூலம் வெளியேற்றப்படுவதை அவர் பார்வையிட்டார்.

சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாழ்வான இடங்களில் இருந்து மழைநீரை அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விடிய விடியப் பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 169 நிவாரண முகாம்களும் , 30 தொலைபேசி எண்களும் உதவிக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பை விட பல மடங்கு கூடுதலாக மழை பெய்து இருப்பதாகவும், இது குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments