அரசு மதுபான பார்களுக்கான ஏலத்தில் 100 விண்ணப்பங்களுடன் வந்த நபரால் பரபரப்பு..

0 4080

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான பார்களுக்கான ஏலத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே நபர் 100 விண்ணப்பங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான பார்களுக்கான ஏலம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்காக 160 விண்ணப்ப படிவங்கள் அரசு மூலம் வழங்கப்பட்ட நிலையில், ஏலத்தில் பங்கேற்பவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை திருவள்ளூர் அரசு மதுபான மொத்தவிற்பனை கிடங்கில் உள்ள பெட்டிகளில் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கோபால் சாமி என்பவர் சுமார் 50 விண்ணப்ப படிவங்களை பெட்டிகளில் போட்டதோடு, மேலும் 50 படிவங்களை உள்ளே போட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த மற்ற பார் உரிமையாளர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அந்த நபரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments