ஃபாக்ஸ்கான் விடுதியில் பெண் ஊழியர்கள் சந்தித்த கொடுமைகள்.. ஒரே அறையில் அளவுக்கு அதிகமான பெண்களைத் தங்கவைத்த அவலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள Foxconn தொழிற்சாலையில் கு ஐபோன்களின் உதிரி பாகங்களை பொருத்தி தரும் பணியில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறி ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், 17 ஆயிரம் பேர் பணியாற்றும் Foxconn மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதியில் ஒரே அறையில் 6 முதல் 20 பெண்கள் வரை தங்க வைக்கப்பட்டதாக அங்கு பணியாற்றிய 5 ஊழியர்கள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தரமற்ற உணவு மட்டுமின்றி தோல் ஒவ்வாமை, நெஞ்சுவலி போன்று எப்போதும் ஏதாவது உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டதாக, தற்போது பணியில் இருந்து நின்றுவிட்ட 21 வயது இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை, அந்நிறுவனத்திற்கு புதிய ஒப்பந்தத்தை ஆப்பிள் நிறுவனம் வழங்காது என கூறப்படுகிறது.
ஒருபுறம் "iPhone 13" ரக தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் தொழிற்சாலைகளில், ஊழியர்களுக்கான வசதிகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை, என ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்கள் வலியுருதி வருகின்ரனர்
Comments