கல்லூரி பேருந்து ஓட்டுநருடனான தகராறில்உணவகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..எச்சரித்து அனுப்பிய போலீசார்

0 3468

ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த கல்லூரி மாணவர்கள், பேருந்து ஓட்டுநருடனான தகராறில் உணவகத்தில் இருந்த மேஜை, நாற்காலியை அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் இருந்து மூன்று பேருந்தில் மாணவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, முன்னே சென்ற பேருந்தை முந்தி வேகமாக செல்லுமாறு ஒரு பேருந்தில் இருந்த மாணவர்கள் ஓட்டுநரிடம் நச்சரிக்கவே, ஆத்திரமடைந்த ஓட்டுநர் மாணவிகள் முன்னிலையில் மாணவர்களை திட்டியுள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ளமுடியாத மாணவர்கள் இன்று மதியம் அப்துல்கலாம் நினைவகம் எதிரே உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த ஓட்டுநருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடிவிட்டதால், உணவகத்தில் இருந்த சேர், நாற்காலியை மாணவர்கள் அடித்து நொறுக்கி, கடை உரிமையாளர், ஊழியர்களையும் தாக்கினர்.

மாணவர்கள் மது அருந்தியிருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments