சென்னையில் முன்னாள் ஊழியர் உதவியுடன் ரூ.5 லட்சம் வழிப்பறி.. 3 பேர் கைது

0 2113

சென்னை மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம், 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25-ம் தேதி இரவு, சுரேன் ஸ்டீல் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தினேஷ் என்ற இளைஞர், வசூல் பணத்துடன் மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே, இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இருவர் 5 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்தி வந்த நிலையில், பழவந்தாங்கலை சேர்ந்த சதிஷ்குமார் மற்றும் முத்தையா தினேஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றிய மதுரவாயலை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அளித்த யோசனையின் பேரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சுப்பிரமணியையும் கைது செய்து, அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments