பழகி பாலியல் தொல்லை.. பழி தீர்த்த மாணவி..

0 10853
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி விரிவுரையாளரை, ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றதாக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி விரிவுரையாளரை, ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றதாக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேளம்பாக்கத்தை அடுத்த காலவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் பி.எச்.டி என்னும் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.இவர் இதற்கு முன்பு SRM கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே நெருக்கமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் செந்திலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆன பிறகும் அந்த மாணவி உடனான உறவை தொடர்ந்து வந்துள்ளார். இதற்கிடையே அதே கல்லூரியில் பயின்ற அருண்பாண்டியன் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து செந்திலிடமிருந்து விலகி சென்றுள்ளார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தொடர்ந்து செந்தில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, இதுபற்றி தனது நண்பர் அருண்பாண்டியனிடம் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து செந்திலை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி செந்திலுக்கு செல்போன் மூலம் பேசி கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வரவழைத்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் செந்தில் மகாபலிபுரம் சாலைக்கு வந்த போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது நண்பர் அருண் பாண்டியனுடன் சேர்ந்து அந்த மாணவி சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தால் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து செந்தில் பலியானார்.

தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பிடித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments