இந்தோனேஷியாவில் பண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அதிகபட்சமாக 7.3 ரிக்டராக பதிவு

0 2999

கிழக்கு இந்தோனேஷியாவில் அமைந்துள்ள பண்டா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 7புள்ளி3 ரிக்டாக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தால் தென்மேற்கு மலுக்கு தீவுப்பகுதியில் 2 வீடுகள் இடிந்து சேதமடைந்திருப்பதுடன் ஒட்டுமொத்தமாக சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒன்றரை மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், டியக்குர் நகரில் இருந்து 132 கிலோமீட்டர் தொலைவில் பண்டா கடல்பகுதியில் 183 கிலோமீட்டர் ஆழத்தில்  மையம் கொண்டிருந்தது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3  நிலநடுக்கங்கள் சுற்றுப்பகுதியில் பதிவாகியதாக அந்நாட்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments